வேற்றுமை பாராட்டல் அல்லது பாகுபாடு, மனித குல ஆரோக்கியத்தை வெகுவாக தீர்மானிக்கிறது. இனம், தோல் நிறம், சாதி, மதம், சுதேசம் அல்லது இடம்பெயர்வு நிலை ஆகியவற்றின் அடிப்படையில் வேற்றுமை பாராட்டுவது உலகெங்கிலும் உள்ள தனிநபர்கள் மற்றும் சமூகங்களின் உடல் நலத்தை, ஆரோக்கியத்தை பெரிதும் பாதிக்கிறது. ஆரோக்கிய குறைபாட்டிற்கு முக்கிய காரணமான வேற்றறுமையையும் அதனால் ஏற்படும் தீய விளைவுகளையும் கட்டுப்படுத்துவதே எங்கள் குறிக்கோள். ரேஸ் & ஹெல்த் என்பது கல்வியாளர்கள், கலைஞர்கள், ஆர்வலர்கள், கொள்கை வகுப்பாளர்கள், அடிமட்ட அமைப்புகள் மற்றும் தனிநபர்களின் கூட்டு ஆகும். இனவெறி மற்றும் பாகுபாடு சமூக உடல்நலத்தை எவ்வாறு பாதிக்கிறது மற்றும் மனித சமுதாய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான செயற்பாடுகளை, தலையீடுகளை ஆராயும் மையமாக இது இருக்கும். உலகெங்கும் உடல்நலமும் ஆரோக்கிய வாழ்வும் சம உரிமையாக அனைவருக்கும் கிடைக்க ஒரு செயலூக்கியை நாம் அமைக்கிறோம். எங்களுடன் ஒன்று சேருங்கள்.

Race & Health Quarterly

Our new quarterly newsletter.